Thursday, July 8, 2010

விழுந்த பல்

சிறு வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பல் விழுந்து முளைப்பது இயல்பான விஷயம். ஆனால் பல் சிறிது ஆட்டம் கண்டவுடன் அவர்களுக்கு வருமே ஒரு பயம்.  நாம் எவ்வளவு எடுத்து கூறினாலும். அவர்களுக்கு பயம் விலகாது. கூட படிக்கும் சில வாண்டுகளுக்கு பல் ஏற்கனவே விழுந்து இருக்கும். ஆக புதிதாக பல் விழ போகும் வாண்டுக்கு பல் விழுந்த வாண்டு சீனியர் ஆகிவிடும்.

 பள்ளியிலோ அல்லது வீட்டிலோ பல் விழுதால் செய்ய வேண்டியவை பற்றி வேறு ஒருவரிடம் இருந்து தெரிந்து கொண்டு. தானும் செயல் படுத்திய சீனியர் வாண்டு அறிவுரை  கூறும்.

விழுந்த பல்லை  உடனே யாரும் பார்க்காமல் கைகளில் வைத்து மூடி கொள்ள வேண்டும். முக்கியமாக வானத்துக்கு பல்லை காட்ட கூடாது. மண்ணில் சிறு பள்ளம் தோண்டி பல்லை புதைத்து விட வேண்டும். புதைக்கும் போது தப்பி தவறி பல்லை வானத்துக்கு காட்டி விட்டால் பல் மீண்டும் முளைக்காது என்று மற்ற பிள்ளைகள் அனைவரும் பயம் காட்டி விடுவார்கள்.

கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி சிறிய குழந்தைகளிடையே இந்த பழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இவ்வளவு ஏன் நாமும் அப்படி தாணே செய்து இருப்போம்.

Tuesday, July 6, 2010

விருதுநகர்

அடிக்கற வெயில் கூட இதமாக இருக்கும் விருதுநகர் மாவட்டம். இது என்ன வெயில் கூட இதமா இருக்குமானு யோசிக்கிறீங்களா? ஆம் அந்த மண்ணில் பிறந்த அனைவரும் அப்படிதான் கூறுவார்கள்.


வெயில் அப்படி இருப்பதால் தான் அம்மன் கூட வெயில்காத்தம்மனாக இங்கு கோயில் கொண்டுள்ளால். விருதுநகர் நகரத்தை ஒட்டியே ஏராளமான அழகான கிராமங்கள் உள்ளன. பொதுவாகவே இக்கராமங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியே. மழை பெய்தால் அந்த நீரை குளம் ஏரிகளில் சேமித்து விவசாயம் செய்வர். கரிசல் மண் வளத்தாலும் மழை நீராலும் விவசாயிகளின் கடும் உழைப்பாலும் பருத்தி, நெல், உளுந்து, துவரை மற்றும் மொச்சை விளைகிறது.

அந்த அழகான கிராமங்களில் விடிய காலையில் வயல்ளுக்கு செல்பவர்கள் தூக்கு சாட்டியுடனும் சிறிய கதிர் அறுக்கும் அரிவாளுடனும் செல்லும் அழகே அழகு. 7.30 மணி முதல் பள்ளிகூடங்களுக்கு பிள்ளைகள் வர தொடங்குவர் பெண் குழந்தைகள் வெள்ளை சட்டை நீல பாவாடையும் ஆண் பிள்ளைகள் வெள்ளை சட்டை காக்கி டவுசருடனும் செல்வர். பெரும் பாலும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் அந்த டவுசரில் உள்ள பொத்தான்கள் காணாமல் போய் விடும். இடுப்பில் நிற்காத அந்த டவுசரை நிற்க வைக்க பிள்ளைகள் படும்பாடு அப்பப்பா அரைநாண் கயிறுதான் அவர்களக்கு பெல்டு. டவுசருக்கு வெளியே கயிற்றை இழுத்து விட்டு டவுசரை இடுப்பில் நிற்க வைப்பர். அனைத்து குழந்தைளின் பைக்கட்டுகளில் (புத்தக பை) மத்திய உணவு சாப்பிடுவதற்காக தட்டு கடிப்பாக இருக்கும். அந்த தட்டு பிள்ளைகள் விளையாடும் போதும் சண்டை போடும் போதும் கேடயமாக மாறி அவர்களுக்கு தற்காப்பு அளிக்கும்.

இப்படி வர்ணித்து கொண்டே போனால் இந்த பதிவு மிகவும் நிண்டு விடும். ஆகவே அடுத்த பதிவில்  தொடர்ந்து பதிவு செய்கிறேன்.