அடிக்கற வெயில் கூட இதமாக இருக்கும் விருதுநகர் மாவட்டம். இது என்ன வெயில் கூட இதமா இருக்குமானு யோசிக்கிறீங்களா? ஆம் அந்த மண்ணில் பிறந்த அனைவரும் அப்படிதான் கூறுவார்கள்.
வெயில் அப்படி இருப்பதால் தான் அம்மன் கூட வெயில்காத்தம்மனாக இங்கு கோயில் கொண்டுள்ளால். விருதுநகர் நகரத்தை ஒட்டியே ஏராளமான அழகான கிராமங்கள் உள்ளன. பொதுவாகவே இக்கராமங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியே. மழை பெய்தால் அந்த நீரை குளம் ஏரிகளில் சேமித்து விவசாயம் செய்வர். கரிசல் மண் வளத்தாலும் மழை நீராலும் விவசாயிகளின் கடும் உழைப்பாலும் பருத்தி, நெல், உளுந்து, துவரை மற்றும் மொச்சை விளைகிறது.
அந்த அழகான கிராமங்களில் விடிய காலையில் வயல்ளுக்கு செல்பவர்கள் தூக்கு சாட்டியுடனும் சிறிய கதிர் அறுக்கும் அரிவாளுடனும் செல்லும் அழகே அழகு. 7.30 மணி முதல் பள்ளிகூடங்களுக்கு பிள்ளைகள் வர தொடங்குவர் பெண் குழந்தைகள் வெள்ளை சட்டை நீல பாவாடையும் ஆண் பிள்ளைகள் வெள்ளை சட்டை காக்கி டவுசருடனும் செல்வர். பெரும் பாலும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் அந்த டவுசரில் உள்ள பொத்தான்கள் காணாமல் போய் விடும். இடுப்பில் நிற்காத அந்த டவுசரை நிற்க வைக்க பிள்ளைகள் படும்பாடு அப்பப்பா அரைநாண் கயிறுதான் அவர்களக்கு பெல்டு. டவுசருக்கு வெளியே கயிற்றை இழுத்து விட்டு டவுசரை இடுப்பில் நிற்க வைப்பர். அனைத்து குழந்தைளின் பைக்கட்டுகளில் (புத்தக பை) மத்திய உணவு சாப்பிடுவதற்காக தட்டு கடிப்பாக இருக்கும். அந்த தட்டு பிள்ளைகள் விளையாடும் போதும் சண்டை போடும் போதும் கேடயமாக மாறி அவர்களுக்கு தற்காப்பு அளிக்கும்.
இப்படி வர்ணித்து கொண்டே போனால் இந்த பதிவு மிகவும் நிண்டு விடும். ஆகவே அடுத்த பதிவில் தொடர்ந்து பதிவு செய்கிறேன்.
Tuesday, July 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
அடடா வெயில் பாத்ததும் ஊர் நியாபகம் வந்துட்டா ...??
ReplyDeleteஅருமையான பதிவு - இன்னும் நிறைய ஊர் கதை சொல்லுங்க,
முடிஞ்சா ஒன்னு ரெண்டு ஊர் போட்டோ கூட போடுங்க.
நண்பர் இரவிக்கு........
ReplyDeleteகன்டிப்பாக இனி தொடர்ந்து பதிவு செய்கிறேன்.... நன்றி
சேம் பிளட் :)
ReplyDelete