Thursday, July 8, 2010

விழுந்த பல்

சிறு வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பல் விழுந்து முளைப்பது இயல்பான விஷயம். ஆனால் பல் சிறிது ஆட்டம் கண்டவுடன் அவர்களுக்கு வருமே ஒரு பயம்.  நாம் எவ்வளவு எடுத்து கூறினாலும். அவர்களுக்கு பயம் விலகாது. கூட படிக்கும் சில வாண்டுகளுக்கு பல் ஏற்கனவே விழுந்து இருக்கும். ஆக புதிதாக பல் விழ போகும் வாண்டுக்கு பல் விழுந்த வாண்டு சீனியர் ஆகிவிடும்.

 பள்ளியிலோ அல்லது வீட்டிலோ பல் விழுதால் செய்ய வேண்டியவை பற்றி வேறு ஒருவரிடம் இருந்து தெரிந்து கொண்டு. தானும் செயல் படுத்திய சீனியர் வாண்டு அறிவுரை  கூறும்.

விழுந்த பல்லை  உடனே யாரும் பார்க்காமல் கைகளில் வைத்து மூடி கொள்ள வேண்டும். முக்கியமாக வானத்துக்கு பல்லை காட்ட கூடாது. மண்ணில் சிறு பள்ளம் தோண்டி பல்லை புதைத்து விட வேண்டும். புதைக்கும் போது தப்பி தவறி பல்லை வானத்துக்கு காட்டி விட்டால் பல் மீண்டும் முளைக்காது என்று மற்ற பிள்ளைகள் அனைவரும் பயம் காட்டி விடுவார்கள்.

கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி சிறிய குழந்தைகளிடையே இந்த பழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இவ்வளவு ஏன் நாமும் அப்படி தாணே செய்து இருப்போம்.

2 comments:

  1. அய்யயோ... அது உண்மை :)
    சின்ன வயசுல சொல்பேச்சு கேட்டு புதைச்சதால முளைச்சு வந்துச்சு,
    இப்போ அதை மறந்து வானத்துக்கு பல்லை காட்டினதால - முளைக்க மாட்டேங்குது.

    அருமையான நினைவு பதிவு ....மிக்க நன்றி.

    அந்த காலத்து பெரியவர்கள் - நல்ல பழக்க வழக்கங்களை நம்மை அறியாது செய்யதூண்டிய வழி நினைத்து வியக்கிறேன். இவை போன்ற விழயங்கள் வெறும் மூட பழக்கமாக பார்க்கபடாமல் - அதன் உள்நோக்கு, விளைவு குறித்து ஆராயும் போது வியத்தகு விழயம் வெளிப்படும் வாய்ப்பை நினைத்து சிலிர்க்கிறேன்.

    ReplyDelete